Tuesday, 12 February 2013

நீ அறிந்தும் அறியாதவனாய்

நான் செய்த தவறு என்ன என்னை எல்லோரும் நேசிக்க மறுப்பது ஏன் பிறந்த நாள் முதல் எனகென்று ஆசைகள் இருந்ததில்லை உன்னோருவனை மட்டுமே நான் நேசிக்கிறேன் எனக்காக கூட நீ இல்லை அறிவேன் ஆனாலும் உன்னில் பாச பைத்தியமாகி உரிமை கொள்கிறேன் என்றோ மரணித்திருபேன் நீ மட்டும் இல்லை என்றால் என்னிடம் உன் பாசம் ஒன்றே உயிராக நீ அறிந்தும் அறியாதவனாய் போதும் துன்பங்கள் விட்டு போகிறேன் விலகி நின்று நினைவில் வராதே நெஞ்சை கொள்ளாதே வலிதாங்கும் சக்தி என்னிடம் இல்லை கண்ணீரால் நன்றி சொல்லி காலத்தை வெறுத்து காலனை எதிர் பார்த்து காத்திருப்பேன் நின்மதியாய் கல்லறையில் தூங்கிவிட ..............v.m.j.gowsi

No comments:

Post a Comment